| ADDED : மார் 20, 2024 12:26 AM
உடுமலை;உடுமலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட எல்லைப்பகுதிகளில், பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்துகின்றனர்.லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, விதிமுறை மீறும் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு, சட்டசபை தொகுதிகளில் நிலையான பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.உடுமலை சட்டசபை தொகுதியில், மூன்று குழுக்கள் நிலையான பறக்கும் படையாக நியமிக்கப்பட்டுள்ளன. வேளாண் துறை அலுவலர் சுந்தரம், கூட்டுறவுத்துறை அலுவலர் சித்ரா, தோட்டக்கலைத்துறை அலுவலர் சிவாநந்தம் உள்ளிட்டோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் சோதனை மேற்கொள்கின்றனர்.குறிப்பாக, உடுமலை சட்டசபை தொகுதிகளின் எல்லைப்பகுதிகளான பெரியபட்டி, சிந்திலுப்பு, செக்போஸ்ட் பகுதி, நஞ்சேகவுண்டன்புதுார், பூசாரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடந்து வருகிறது.