மேலும் செய்திகள்
மாணவர்களை ஈர்க்கும் அரசு பள்ளி
29-Dec-2024
கோவை; ஏ.ஜே.கே., கலை, அறிவியல் கல்லுாரி சார்பில், 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான, ஏ.ஜே.கே., கால்பந்து போட்டி கல்லுாரி வளாகத்தில் நேற்று துவங்கியது.ஏ.ஜே.கே., கல்வி நிறுவனங்களின் தலைவர் அஜித்குமார் லால் மோகன் போட்டியை துவக்கி வைத்தார். போட்டிகளில், 22 அணிகள் பங்கேற்கின்றன. வெற்றிப்பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.போட்டியில் அதிக கோல் அடிக்கும் விளையாட்டு வீரருக்கு தங்க காலணியும், சிறந்த விளையாட்டு வீரருக்கு தங்க பந்தும், சிறந்த கோல் கீப்பருக்கு தங்கக் கையுறையும் பரிசாக வழங்கப்படவுள்ளன.தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீடு சார்ந்த சலுகைகளும் வழங்கப்படும்.போட்டியின் முதல் நாளான நேற்று பாலக்காடு மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளி, குமாரபுரம், அரசு மேல்நிலைப் பள்ளி கஞ்சிக்கோடு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சித்தூர், புதுநகரம் பள்ளி, தருன்னஜாத் மேல்நிலைப் பள்ளி, நெல்லிப்புழா அரசு மேல்நிலைப் பள்ளி, பொட்டசேரி, அரசு மேல்நிலைப் பள்ளி, வரோடு, அரசு மேல்நிலைப் பள்ளி, கொட்டபாடம், எஸ்.எம்.ஏ., எடத்தநாட்டுகர, அரசு மேல்நிலைப் பள்ளி, சுனாங்காடு, கொல்லங்கோடு பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி தத்தமங்கலம், பி.இ.எம்., மேல்நிலைப் பள்ளி பாலக்காடு ஆகிய, 14 அணிகள் விளையாடின. தொடர்ந்து போட்டிகள் அடுத்த மூன்று நாட்கள் நடக்க உள்ளன.
29-Dec-2024