உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டாய திருமணம் செய்து வைத்தவர் கைது 

கட்டாய திருமணம் செய்து வைத்தவர் கைது 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கட்டாய திருமணம் செய்து வைத்த நபரை, கோமங்கலம் போலீசார் கைது செய்தனர். கோமங்கலம் போலீசார் கூறியதாவது: பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதுாரை சேர்ந்த அருண்பிரசாத்,35, என்பவர், 18 வயது பெண்ணை, 19 வயது ஆண் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும், திருமணம் செய்து கொள்ளாவிட்டால், போக்சோ வழக்கில் கைது செய்வதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், புகார் அளிக்காமல்  இருக்க, இரண்டு லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக தெரிகிறது. பின்னர், 19 வயது ஆணை அடைத்து வைத்து, கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார். இது குறித்து, பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில், கட்டாய திருமணம் செய்து வைத்தல், அடைத்து வைத்தல், மிரட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் அருண் பிரசாத் கைது செய்யப்பட்டார். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை