உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நிதி கோவை ஏ3 மாநாட்டில் பேச்சு

மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நிதி கோவை ஏ3 மாநாட்டில் பேச்சு

கோவை: கோவையில் நடைபெற்று வந்த, 'விழித்திரு, எழுந்திரு, உறுதியாக இரு' என்ற, 'ஏ3' மாநாடு, ஆரோக்கியமான விவாதத்துடன் நிறைவடைந்தது.'வாய்ஸ் ஆப் கோவை' அமைப்பு சார்பில், 'விழித்திரு, எழுந்திரு, உறுதியாக இரு' என்ற தலைப்பிலான 'ஏ3' எனும், அவேக், அரைஸ், அசெர்ட் மாநாடு கோவை, அவிநாசி ரோடு, 'கொடிசியா - இ' ஹாலில், இரண்டு நாட்கள் நடந்தது.தர்மம், சனாதன தர்மம், ஆன்மிகம் சார்ந்த தலைப்புகளில் நேற்று முன்தினம், இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான அரசியல் குறித்த தலைப்புகளில் நேற்றும், கருத்தரங்கம் நடந்தது. காலை, 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை, இரண்டு நாட்களில், 25க்கும் மேற்பட்டோர் ஆன்மிக சொற்பொழிவு, கருத்துக்களை பரிமாறினர்.

'செங்கோல்' ஆட்சி!

'வங்கதேசம் இன்று' என்ற தலைப்பில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று பேசியதாவது:எத்தனையோ படையெடுப்புகளை தாண்டி, நம் பாரதம் நிலைத்து நிற்கிறது. நமக்கு சுதந்திரம் கிடைக்கும்போது, நாடு வெட்டி பிளக்கப்பட்டது. வீரம் மிக்க சீக்கியர், ஹிந்துக்கள் வசித்த பஞ்சாபில் பாதி மற்றும் லாகூர் நம்மிடமில்லை.வங்கத்தில் பாதி நம்மிடம் இல்லை. தமிழகம் போல, வங்க மொழி இலக்கிய செழுமை வாய்ந்தது. 1905ல் வங்கப் பிரிவினைக்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து, மத ரீதியாக தனி நாடு கோரி கலவரங்கள் வெடித்தன. ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர்; துரத்தப்பட்டனர்.வங்க தேசம், பாகிஸ்தானுடன் இணைந்தபோது, ஹிந்துக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். வங்கதேச கலாசாரத்தை பாக்., ராணுவம் அழித்தது. இந்திய ராணுவம் சென்று, வென்று தனி வங்கதேசத்தை உருவாக்கி கொடுத்தது. அங்கு, 1972க்கு பிறகு, 26 சதவீதமாக இருந்த ஹிந்துக்கள் இன்று, 6 சதவீதமாக குறைந்துள்ளனர்.இன்று மாணவர் போராட்டம் என்ற பெயரில் ஹிந்துக்கள் தாக்கப்படுகின்றனர். கோவில்கள், பகவத் கீதை எரிக்கப்பட்டன. துறவி கைது செய்யப்பட்டுள்ளார். நாளை இது இந்தியாவில் நடக்காமல் இருக்க, விழித்திட வேண்டும். வளமான தமிழகம் உருவாக வரும், 2026ல் செங்கோல் ஆட்சி வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

தர்மத்திற்கு எதிரானது

'தேசம் முதலா அல்லது மதம் முதலா' எனும் தலைப்பில், தேசியவாதி ஜெரோம் ஆன்டோ பேசியதாவது:மதமாற்றம் இப்போது எளிதாக நடக்கிறது. ஒருவர் மதமாற்றம் செய்யப்பட்டால், அவர் இந்தியாவுக்கு எதிராக மாற்றப்படுகிறார் என அர்த்தம். உங்களது சனாதன நம்பிக்கையை மாற்றுகின்றனர். அவர்களின் கோட்பாடுகள் நம் தர்மத்துக்கு எதிராக உள்ளன. இதனால், சமூக மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி, மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்போது நீங்கள் விழிக்கவில்லை எனில், உங்கள் குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தையும் அனுபவிக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.

'விழிப்புடன் இருக்க வேண்டும்'

'ஹிந்து மதம் இன்று எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில், அர்ஷ வித்யா சமாஜம் நிறுவனர் ஆச்சார்யா மனோஜ் பேசியதாவது: எதிர்மறை எண்ணங்களை நம் மதம், ஆன்மிகம், சமூகம் மீது திணிப்பது, போதை வாயிலாகவும், இளம் தலைமுறையினரை மூளைச்சலவை செய்தல் என, ஆறு விதங்களில் மத மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. புதுவித எதிரிகளை சந்தித்து வருகிறோம்.நம்மை மத மாற்றம் செய்வதற்கான, மறைமுக நடவடிக்கைகளில் விழிப்புடன் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் சிறுபான்மை ஹிந்துக்கள், மதமாற்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.இதிலிருந்து விழித்துக்கொள்ள, ராமாயணம், மகாபாரதம், அர்த்த சாஸ்திரம் உள்ளிட்டவை வாயிலாக சனாதன தர்மத்தின் அடிப்படை சாராம்சத்தை, நம் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Oviya Vijay
டிச 03, 2024 17:49

இது ஒரு வெத்துவேட்டு... காமெடி பீஸ்...


Palanisamy T
டிச 03, 2024 17:16

1. வங்கதேசத்தைப் பற்றி பேசியுள்ளீர்கள். பாதி இந்தியாவிடமில்லையென்றும் சொல்லியுள்ளீர்கள். அன்றைய மறுபாதி கிழக்குப் பாகிஸ்தான். அன்று சுதந்திர இந்தியா மதத்தால் பிரிவினையானது உடைந்தும் போனது. மதத்திற்க்கு அவ்வளவு சக்தி. பிரச்சனை அவர்களுக்கு நம் மதத்தின் மீது நம்பிக்கையில்லை. மதச் சார்பற்றக் கொள்கையிலும் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. அதனால் பிரிந்தார்கள். 2. பிரச்சனை அதோடு நிற்கவில்லை. 1971-ல் கிழக்குப் பாகிஸ்தான் பிரிவினை கேட்டு மேற்கு பாகிஸ்தானோடு போராடினார்கள். மேற்கு பாகிஸ்தான் ராணுவத்தினரின் அடக்குமுறை தாங்காது அன்று வங்கதேச எல்லையில் அகதிகள் தஞ்சம் அடைந்தார்கள். இந்தியாவின் பாதுகாப்பு நிலைப்பாடு கருதி இந்தியாவின் தலையீடு அவசியமாயிற்று. இந்திய நாட்டின் தலையீட்டால் உருவானதுதான் இன்றைய சுதந்திர வங்கதேசம். அன்று இந்தியா மட்டும் தலையிடவில்லை யென்றால் இன்று வங்கதேசம் இல்லை அன்று வாழ்ந்த மக்களும் இன்று விலாச மில்லாமல் போயிருப்பார்கள். அந்த அளவிற்கு அன்று ராணுவத்தினரின் அடக்குமுறைகள் கொடூரங்கள் . ஆனால் இன்று இந்தியாவிற்கு எதிராக அவர்களின் செயல்பாடும், போராட்டக்காரர்களின் செயல்களையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்று இந்தியா செய்த உதவியை இவர்கள் மறந்துவிட்டார்களா? இன்று அவர்கள் அங்குள்ள இந்துக்களுக்கு எதிராகவும் செயல்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை இதுதான் அவர்களுடைய குணம். இனிமேல் நாம் எப்படி வாழ வேண்டுமென்று இவர்களிடம் இருந்து நாம் நிறைய இன்னும் பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. கற்றுக் கொள்வோம்.


Palanisamy T
டிச 03, 2024 07:27

ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்றுச் சொல்வது திருமந்திரம். இறைவன் ஓருவன், அவன் எல்லா உயிர்களிலும் குடிக் கொண்டுள்ளான் என்பதுதான் இதன் பொருள். காக்கையும் குருவியும் எங்கள் சாதியென்று பாடியவர் பாரதியார்?இதையெல்லாம் மற்றவர்கள் உணர்ந்துள்ளார்களா அல்லது இதை பற்றி பேசுகின்றார்களா? இறைவன் எந்த உயிர்களையும் உயர்த்தியோ தாழ்த்தியோ படைக்கவில்லை என்பதுதான் சேதி உண்மையும் அதுவே. திருக்குறளின் இப்படியொரு பாடல். " இரந்து வாழ்தல் வேண்டின் பரந்துக் கெடுக உலகு இயற்றியான்". இங்கே உலகு இயற்றியான் என்பது இறைவனை குறிக்கின்றது. ஆதாவது உயிர்களின் படைப்பில் பிச்சையெடுத்து இரந்து ஓருயிர் வாழவேண்டுமென்று அந்த இறைவன் படைப்பிலிருந்தால் அவனை பரந்துக் கெடுக என்கின்றது குறள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் இதுதான் நம் சைவ சமய நெறி.


Palanisamy T
டிச 03, 2024 07:00

நம் இந்துமதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத கோட்பாடுகள், சாதிவெறித் தனங்கள், தீண்டாமைகள் அதனால் நம்மிடையே ஏற்படும் உயர்வு தாழ்வு, பிரிவினைகள் மற்றும் தீண்டாமைகள் இவற்றை எல்லாம் நாம் சரிச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த மதமாற்றம் போன்ற அசிங்கங்களை கொடூரங்களை கட்டுப் படுத்தமுடியும்.


Palanisamy T
டிச 03, 2024 06:44

அவரவர் மதத்தில் ஆயிரம் குறைபாடுகள் மூடநம்பிக்கைகள், ஓட்டைகள், ஏற்றுக் கொள்ள முடியாத கோட்ப்பாடுகள், இருந்தாலும் நாம் அதிலெல்லாம் தலையிடுவதில்லை, அதைப் பற்றி பேசுவதுமில்லை. இருந்தும் ஏன் அவர்கள் நம்மிடம் இன்னும் இந்த வேண்டாத விபரீத விளையாட்டுகளை நடத்துகின்றார்கள். இந்த மதங்களெல்லாம் நேற்றுவந்த மதங்கள் இந்த மண்ணில் காலம் காலமாக மக்கள், பிற மன்னுயிர்கள் எல்லாம் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் இந்த மதஙகள் ஏன் இவர்களை காப்பாற்ற முன் வரவில்லை. அவர்களெல்லாம் இப்போது எங்கே? என்ன ஆனார்கள் பதில் கிடைக்குமா?


Priyan Vadanad
டிச 03, 2024 05:39

முருகா முருகா இந்தியாவின் இப்போதைய வளர்ச்சிக்கு யார் காரணம் யார் என்று தெரிந்தும் இப்படி ஏசலாமாப்பா?


Palanisamy T
டிச 02, 2024 19:24

ஒருவர் மதம் மாற்றப் பட்டால் அவர் இந்தியாவிற்கு எதிராக மாறுகின்றார் என்றால் அதே மதமாற்றம் தமிழகத்தில் நடந்தால் அவர் தமிழர்களின் எதிரியாக மாறிவிடுகின்றார் . மதத்தால் நாம் இந்துக்களாக வாழ்ந்தாலும் நம் உயிர்நாடிப் போன்றது காலத்தையும் வென்று நிற்கின்ற நம் சைவ சமயம் . தமிழும் சைவசமயமும் காலத்தால் பிரிக்க முடியாதவை. "சைவம்" "சமயம்" என்ற இந்த இரண்டுக் சொற்களை கேட்கும் போது எவ்வளவு இனிமையாக இருக்கின்றதென்று தெரிந்துக் கொள்ளலாம் நல்ல இந்துக்களாக வாழ்தலே நாம் அனைவரும் நல்ல சைவ சமயத்தவர்கள் என்பதும் உண்மை. சைவத்தைப் பேணுவோம், போற்றுவோம்.


mei
டிச 02, 2024 16:29

நூற்றாண்டு காலமாக இது தானே நடந்து வருகிறது


முக்கிய வீடியோ