உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரஸ்ட் ஹில் அகாடமி மாணவர்கள் அசத்தல்

பாரஸ்ட் ஹில் அகாடமி மாணவர்கள் அசத்தல்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூர் பாரஸ்ட் ஹில் அகாடமி பள்ளி, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அசத்தியுள்ளது.பிளஸ் 2வில், மாணவன் ராஜநரசிம்மன் 594 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்; மாணவி தீபிகா 565 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும்; ருஹானி 560 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்.பிளஸ் 1ல், மாணவி கீர்த்திகா 580 மதிப்பெண் பெற்று முதலிடமும்; சம்யுக்தா 566 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும்; ஹரிணி 539 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்.10ம் வகுப்பு தேர்வில், மாணவன் கீர்த்திகுமார், 493 மதிப்பெண் பெற்று முதலிடமும்; மாணவி தர்ஷினி, 492 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும்; மாணவன் ருஜிந்த் 485 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்.அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் பாபா ரமேஷ், செயலாளர் பரணி ரமேஷ், ஸ்ரீ சிவரங்கராஜ், பள்ளி முதல்வர் உமாதேவி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !