மேலும் செய்திகள்
அச்சுதானந்தன் மறைவுக்கு அஞ்சலி
23-Jul-2025
கோவை; கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மறைவையொட்டி, கோவையில், மா.கம்யூ., சார்பில், மவுன ஊர்வலம் நடந்தது. நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட் கட்சியினர், கருப்பு பேட்ஜ் அணிந்து, காந்திபுரம், திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, சித்தாபுதூர் ஜெயா பேக்கரி வரை, ஊர்வலமாக சென்றனர். அங்கு, அச்சுதானந்தன் திருவுருவ படத்திற்கு, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நடந்த, இரங்கல் கூட்டத்திற்கு, மா.கம்யூ.,மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்து உரையாற்றினார். அதன்பின், முன்னாள் எம்.பி., நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., வெள்ளியங்கிரி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர், புகழஞ்சலி செலுத்தினர்.
23-Jul-2025