மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
06-May-2025
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி, சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2005 - 07ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் மாரிமுத்து, கணித ஆசிரியர் சாமிநாதன், ஆசிரியர் வேல்முருகன் மற்றும் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.பள்ளியில் படித்த போது பாடம் நடத்திய ஆசிரியர்கள் அங்குராஜ், கனகராஜ், அம்சவள்ளி, தங்கமுத்து ஆகியோரை, முன்னாள் மாணவர்கள் கவுரவித்து ஷீல்டுகளை வழங்கினர். முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துரையாடல் நடந்தது. அதில், மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளியில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.அதன்பின், மாணவர்கள், நண்பர்களுடன் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும், வாழ்வில் சந்தித்த அனுபவங்கள், குடும்பம் என அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொண்டு ஆண்டுக்கொரு முறை சந்திக்க முயற்சிக்க வேண்டும் என திட்டமிட்டனர். இந்த நிகழ்ச்சியில், 60 பேர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
06-May-2025