மேலும் செய்திகள்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; விஸ்வநாதன் சாடல்
09-Oct-2024
கோவை; தமிழக முதல்வர் பங்கேற்ற விழாவில், தற்போது அரசு உயர் பதவிகளில் இருக்கும் கோவையின் முன்னாள் கலெக்டர்கள் நான்கு பேர் பங்கேற்றது அரசு அதிகாரிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.கோவையில் நேற்று நடந்த விழாக்களில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் கோவையின் முன்னாள் கலெக்டர்களான, முருகானந்தம், உமாநாத், அர்ச்சனாபட்நாயக், சமீரன் ஆகியோர் பங்கேற்றனர்.தற்போது, முருகானந்தம் தலைமை செயலாளராகவும், உமாநாத் தமிழக முதல்வரின் தனிச்செயலாளராகவும், அர்ச்சனா பட்நாயக் தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயலராகவும், சமீரன் வீட்டுவசதி துறை மேலாண் இயக்குனராகவும், பொறுப்பு வகித்து வருகின்றனர். கோவையின் முன்னாள் கலெக்டர்களுடன் பணிபுரிந்த அரசு அதிகாரிகள் பலரும் இதை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.
09-Oct-2024