உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நான்கு வழி சாலை விரிவாக்கம்; நிலம் அளவீடு

நான்கு வழி சாலை விரிவாக்கம்; நிலம் அளவீடு

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசிக்கு, அமையும் நான்குவழி சாலை விரிவாக்கத்துக்கான நிலம் அளவீடு செய்யும் பணிகள் நடந்தன.மேட்டுப்பாளையம்-அவிநாசி சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இரு வழி சாலையை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கின்றன. இதற்கு இடையூறாக உள்ள மரங்கள், வெட்டப்படுகின்றன. மேலும் சாலை விரிவாக்கத்துக்கான இடங்களை அளவீடு செய்யும் பணிகள் தற்போது நடக்கிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வருவாய், நெடுஞ்சாலைத் துறைகள் இணைந்து, சாலையின் இருபக்கம் விரிவாக்கத்திற்கு தேவையான இடங்களை, அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளன. தேவையான இடம் எடுக்கப்பட உள்ளது என்ற தகவல், கட்டடத்தின் உரிமையாளருக்கு தெரிவிக்கப்படும்.புதிதாக அமைக்கப்படும் நான்கு வழி சாலை, 19.20 மீட்டர் அகலத்தில் அவிநாசி வரை, 38.2 கிலோ மீட்டர் துாரத்துக்கும் அமையும். சாலையின் மையப் பகுதியில், 1.2 மீட்டர் அகலத்தில் மைய தடுப்பான் அமைக்கப்படும்.கோவை மாவட்ட எல்லையில் இருந்து, ஆறு இடங்களில் உள்ள பழைய பாலங்கள் விரிவாக்கம் செய்து மாற்றி கட்டப்படும். நடூரில் மட்டும் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை