உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகை பறித்தவருக்கு நான்கு ஆண்டு சிறை

நகை பறித்தவருக்கு நான்கு ஆண்டு சிறை

கோவை; கோவை, சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த லதா,47, கடந்த 2024, பிப்.,18, இரவில் வி.கே.கே.மேனன் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த, புலியகுளம் பகுதியை சேர்ந்த பிரதீப்குமார்,25, கத்தியை காட்டி மிரட்டி, லதாவின் ஒன்றரை சவரன் தங்க நகையை பறித்தார். அவர் கூச்சலிடவே, பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது, கத்தியை காட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து தப்பினார். காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து, பிரதீப் குமாரை தேடி வந்தனர். வாகன சோதனையின் போது சிக்கினார். கைது செய்து விசாரித்த போது, 10க்கும் மேற்பட்ட நகை பறிப்பு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பிரதீப்குமார் மீது, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜ், பிரதீப்குமாருக்கு நான்காண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிஷா ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி