உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த  தங்கத்தை மீட்டு தருவதாக மோசடி

சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த  தங்கத்தை மீட்டு தருவதாக மோசடி

கோவை: கோவை விமான நிலையத்தில், சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த தங்க நகைகளை மீட்டுத் தருவதாக கூறி, மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான்,37. மலேசியாவில் உள்ள நகைக்கடையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம், மலேசியாவில் இருந்து கோவை வந்த தனது சகோதரி ரஜீனாவிடம் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை, கொடுத்து அனுப்பினார்.கோவை ஏர்போர்ட்டில் ரஜீனாவின் உடைமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ரூ. 30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், ரஜீனாவிற்கு கோவை காளப்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார். அவர் ரஜீனாவிடம், தனக்கு கோவை விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது; அவர்களிடம் இருந்து நகைகளை, மீட்டுத்தர உதவுவதாக தெரிவித்துள்ளார். இதற்காக பலருக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறினார். இதை நம்பிய ரஜீனா, ரூ. 9.50 லட்சத்தை, பாலகிருஷ்ணனிடம் கொடுத்தார். ஆனால் அவர் சொன்ன படி நகைகளை மீட்டு தரவில்லை. ரஜீனா இது குறித்து, தனது சகோதரர் அப்துல் ரகுமானிடம் தெரிவித்தார்.ரகுமான் கோவை பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ