உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ட்ரோன் தயாரித்து தருவதாக  ரூ.48.44 லட்சம் மோசடி

ட்ரோன் தயாரித்து தருவதாக  ரூ.48.44 லட்சம் மோசடி

கோவை: கோவை, சிங்காநல்லுார், நாராயணசாமி நகரை சேர்ந்தவர் ரிஷி, 26. விவசாயம் தொடர்பான 'ட்ரோன்' விற்பனை நிறுவனம் நடத்துகிறார். இவர், சென்னை சோமங்கலத்தில் எம்.கே.டெக் என்ற நிறுவனம் நடத்தி வரும் முரளி கிருஷ்ணன், 40, என்பவரிடம், வேளாண் தொழில் தொடர்பான ட்ரோன்களை வடிவமைத்து தரும்படி ஆர்டர் கொடுத்தார்.ஆர்டரை பெற்றுக்கொண்ட முரளி கிருஷ்ணன், ரிஷியிடம் இருந்து பல தவணைகளில், 48.44 லட்சம் ரூபாய் பெற்றார். நீண்ட நாட்களாகியும் அவர் ட்ரோன் தயாரித்து தராததால், பணத்தை திருப்பி தரும்படி ரிஷி கேட்டார். முரளி கிருஷ்ணன் பணத்தையும் தரவில்லை என்பதால், ரிஷி அளித்த புகாரின்படி சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி