உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.150 கோடி வரை மோசடி; கமிஷனர் அலுவலகத்தில் புகார்

ரூ.150 கோடி வரை மோசடி; கமிஷனர் அலுவலகத்தில் புகார்

கோவை; கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று காலை 50க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். அதில், பணம் டெபாசிட் செய்தால் ஒரு மாதத்தில் இரட்டித்து தருவதாக க்ரோகர் எக்சேன்ஜ், வெல்த் வின் வின் பண்ட் நிறுவனத்தின், ஹேமன் பாஸ்கர் உள்ளிட்டோர் மோசடி செய்ததாகவும், மாநிலம் முழுவதும், 5,000க்கும் மேற்பட்டோர் ரூ.150 கோடி வரை முதலீடு செய்துள்ளதாகவும், அப்பணம் முழுவதையும் மோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: க்ரோகர் எக்சேன்ஜ், வெல்த் வின் வின் பண்ட் ஆன்லைன் கிரிப்டோ கரன்ஸி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக, ஜூம் மீட்டிங் மூலம் தெரிவித்தனர். நிறுவனத்தின் ஹேமன் பாஸ்கர் உள்ளிட்ட, 27 பேர் பேசினர். 2,500 டாலர் மதிப்பில் பணம் செலுத்தினால், 5,000 டாலர், 3,000 டாலர் மதிப்பிலான பணத்தை செலுத்தினால், 6,000 டாலர் என தெரிவித்தனர். பணத்துடன் தங்க நகைகள் தருவதாகவும் தெரிவித்தனர். இதை நம்பி தமிழகம் முழுவதும், 5,000க்கும் மேற்பட்டோர், ரூ.150 கோடி வரை முதலீடு செய்தனர். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள், தராமல் ஏமாற்றி வருகின்றனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !