உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இலவச ஆம்புலன்ஸ் ஒப்படைப்பு

இலவச ஆம்புலன்ஸ் ஒப்படைப்பு

அன்னுார்; பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆம்புலன்ஸ் இலவசமாக மா.கம்யூ மாநாட்டில் வழங்கப்பட்டது.ஒன்றிய மா.கம்யூ மாநாடு நேற்று முன்தினம் அன்னுாரில் நடந்தது. முன்னதாக மெயின் ரோட்டில் இருந்து, தென்னம்பாளையம் ரோடு வழியாக யூ.ஜி., மஹால் வரை பேரணி நடந்தது.கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி பேசினார். மாநாட்டில் பொதுமக்களின் இலவச பயன்பாட்டுக்காக ஆம்புலன்ஸ் கட்சி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோபால், மனோகரன், ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ