உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இலவச கண் சிகிச்சை முகாம் 51 பேருக்கு பரிசோதனை

இலவச கண் சிகிச்சை முகாம் 51 பேருக்கு பரிசோதனை

அன்னூர்: இலவச கண் சிகிச்சை முகாமில் 51 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கஞ்சப்பள்ளி ஊராட்சி மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில், ஊத்துப்பாளையத்தில், நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமில், பார்வை குறைபாடு, கண்ணில் நீர் வடிதல், கண்புரை, மாலைக் கண் நோய் உள்ளிட்ட கண் நோய்களுக்கு 51 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 'சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,' என முகாமில் அறிவுறுத்தப்பட்டது. முகாமில் ஊராட்சி செயலர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ