உள்ளூர் செய்திகள்

இலவச மருத்துவ முகாம்

கோவை, ; பா.ஜ., மருத்துவ பிரிவு வடவள்ளி மண்டல் சார்பில், இலவச மருத்துவ முகாம், நவாவூர் ஹேப்பி ட்ரீ கிட்ஸ் பள்ளியில் நடந்தது. முகாமில் பொது, குழந்தைகள், மகளிர், குடல் அறுவை சிகிச்சை, எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை துறை, தோல் நல சிகிச்சை, கண் நலம் மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை ஆகிய துறைகளின், சிறப்பு மருத்துவர்களால் இலவசமாக ஆலோசனை வழங்கப்பட்டது. இம்முகாமிற்கு பா.ஜ., வடவள்ளி மண்டல் தலைவர் பாலாம்பிகா ஆறுமுகம், பா.ஜ., மருத்துவ பிரிவு மாவட்ட சுரேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !