உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நாளை நடக்கிறது

இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நாளை நடக்கிறது

பொள்ளாச்சி; கோவை ஜெம் மருத்துவமனை, பொள்ளாச்சி லயன்ஸ் கிளப் சார்பில், நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள லயன்ஸ் கிளப் கட்டடத்தில், இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நாளை, 4ம் தேதி காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம் தலைமை வகிக்கிறார். ஜெம் மருத்துவமனை டாக்டர் பாரத்குமார் முன்னிலையில் முகாம் நடக்கிறது.வயிற்றுக்கோளாறு, குடலிறக்கம், பித்தப்பை கற்கள், மலக்குடல், பெருங்குடல், கல்லீரல், கர்ப்பப்பை கோளாறுகள், புற்றுநோய் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.பரிசோதனை தேவைப்படுவோர், காலை உணவு உட்கொள்ளாமல் வரவும். மருந்து, மாத்திரைகள் இலவசம். முன்பதிவு விபரங்களுக்கு, 73589 10515, 98422 10209 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை