உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 200 பேருக்கு மருத்துவ இலவச ஆலோசனை

200 பேருக்கு மருத்துவ இலவச ஆலோசனை

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அன்னைக்கரங்கள் நல சங்கமும், சர்வதேச ரோடு ட்ராக் சங்கமும் இணைந்து அபி கிருஷ்ணா சித்த மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு சித்த மருத்துவர் பிரகாஷ் அபிராம் தலைமை வகித்தார். இதில், நாள்பட்ட மூட்டு வலி, கழுத்து வலி, இடுப்பு வலி, சைனஸ், உடல் சோர்வு, ஆஸ்துமா, வயிற்றுப்புண், பசியின்மை, சர்க்கரை நோய், மாதவிடாய் கோளாறு, குழந்தையின்மை, தைராய்டு, முதுகு தண்டுவட தேய்மானம், தோல் தொடர்பான வியாதிகளுக்கு இலவச ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை