உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயறு, காய்கறி விதை, பழச்செடி இலவசம் வேளாண், தோட்டக்கலை துறை அழைப்பு

பயறு, காய்கறி விதை, பழச்செடி இலவசம் வேளாண், தோட்டக்கலை துறை அழைப்பு

கோவை : ஊட்டச்சத்து வேளாண் இயக்கத்தின் கீழ், வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடி தொகுப்புகள், பயறு வகை விதைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மரத்துவரை, காராமணி, அவரை அடங்கிய விதைத்தொகுப்பு இலவசமாக வழங்கப்படும். மாவட்டத்தில் 3,000 பேருக்கு பயறு வகை விதைத்தொகுப்பு அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படும்' என தெரிவித்துள்ளார்.தோட்டக்கலை துணை இயக்குனர் சித்தார்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டத்தில், 51 ஆயிரம் காய்கறி விதைத் தொகுப்புகள், 30 ஆயிரத்து, 550 பழச்செடிகள் தொகுப்பு 100 சதவீத மானியத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்பட உள்ளன. வீடுகளில் நடவு செய்ய ஏதுவாக இடம் உள்ளவர்கள் மற்றும் விவசாயிகள், உழவர் செயலியில் பதிவு செய்து, tnhorticulture.tn.gov.inவலைத்தளத்தில் ஆதார் எண் பதிவேற்றம் செய்தவர்களுக்கு வழங்கப்படும். ஆதார் அல்லது குடும்ப அட்டை நகல்களுடன், அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை