இலவச மரக்கன்றுகள்
பெ.நா.பாளையம்: பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான, தமிழ்நாடு பல் உயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தில், நிழல் தரக்கூடிய மரங்கள், பழ வகை மரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்கள், கல்லுாரி வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாய பெருமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். கோவை ரேஸ் கோர்ஸ், மாவட்ட வன அலுவலர் குடியிருப்பு வளாகத்தில் நர்சரி உள்ளது. இங்கு மகாகனி, கொடுக்காப்புளி, நாவல், நெல்லி, புளி, புங்கன், செண்பகம், மந்தாரை, மகிழம், நீர் மருது உள்ளிட்ட மரக்கன்றுகள் உள்ளன. விபரங்களுக்கு: பெரியநாயக்கன்பாளையம் சமூக காடுகள் சரக வனவர் ஜெயபிரகாஷ், 94438 66445.