கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி
கோவை: சரவணம்பட்டி கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், இலவச கறவைமாடு வளர்ப்பு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி, வரும், 4ம் தேதி காலை, 10:30 முதல் மாலை, 3:00 மணி வரை நடைபெறும். இதில், மாடு இனங்கள், வளர்ப்பு முறை, கொட்டகை அமைப்பு, நோய் மேலாண்மை, தடுப்பு பூசி உள்ளிட்ட அனைத்தும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி குறித்த விவரங்களை, 0422-2669965 என்ற எண்ணில் கேட்டு அறியலாம் என, கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.