உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துாய்மை பணியாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை

துாய்மை பணியாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை

மேட்டுப்பாளையம்; சிறுமுகை பேரூராட்சியில், தூய்மை பணியாளர்களுக்கான, முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடந்தது. சிறுமுகை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இதில் தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என, 74 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு முழு உடல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம், முத்துசாமி திருமண மண்டபத்தில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் தலைமை வைத்தார். தலைவர் மாலதி உதயகுமார் முகாமை துவக்கி வைத்தார். பணியாளர்களுக்கு கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை மருத்துவ குழுவினர், முழு உடல் பரிசோதனை செய்தனர். அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர், கண் பரிசோதனை செய்தனர். முகாமில் மொத்தமாக, 74 பணியாளர்களுக்கு, ரத்த பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, இ.சி.ஜி., எடுத்தல் உள்ளிட்ட பரிசோதனை செய்தனர். சுகாதார ஆய்வாளர் சொக்கநாதன் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ