மேலும் செய்திகள்
புதிய மேல்நிலை தொட்டி பயன்பாட்டுக்கு வந்தாச்சு!
24-Sep-2024
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கொண்டாம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடுவது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கொண்டம்பட்டியில் சீட்டு விளையாடிய நஞ்சப்பன், 41, கிருஷ்ணகுமார், 31, கனகராஜ், 43, ஆறுமுகம், 41, சபரிநாதன், 29, செல்வராஜ், 44, திருமூர்த்தி, 43, கார்த்திக், 32, அலாவுதீன், 28, ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டுகட்டுகள் மற்றும் 9,100 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
24-Sep-2024