உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிம்ஸ் கல்லுாரியில் காந்தி சிலை நிறுவல்

சிம்ஸ் கல்லுாரியில் காந்தி சிலை நிறுவல்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில் (சிம்ஸ்), காந்தி சிலை நிறுவும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்து பேசுகையில், ''உலக பொருளாதாரத்தில் இந்தியா, மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த நிலைக்கு முன்னேற்றுவது மாணவர்களாகிய உங்களிடம் உள்ளது. வேலைதேடுவதை விட வேலை கொடுப்பவராக மாறி தொழில் முனைவராக வேண்டும். தகுதிகளை வளர்த்துக்கொண்டு, தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்,'' என்றார். கல்லுாரியின் இயக்குனர் (பொ) சர்மிளா வரவேற்று பேசினார். இயக்குனர் முனைவர் சரவணபாபு, என்.ஜி.எம். கல்லுாரியின் முதல்வர் மாணிக்க செழியன் ஆகியோர் பங்கேற்றனர். பேராசிரியர் முனைவர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !