உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காந்திமாநகர் அரசு பள்ளிக்கு நாடக போட்டியில் முதல் பரிசு!

காந்திமாநகர் அரசு பள்ளிக்கு நாடக போட்டியில் முதல் பரிசு!

கோவை, : மாநில அளவில் நடந்த அறிவியல் நாடக விழாவில் பங்கேற்று, முதல் பரிசை வென்றுள்ள கோவை காந்திமாநகர் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பாராட்டினார்.பள்ளி மாணவர்களுக்கு, தென்மாநில அளவில் அறிவியல் நாடக விழா நடக்க உள்ளது. இதில் அறிவியல் சார்ந்த சிந்தனைகளை, கருப்பொருளில் வைத்து, மாணவர்களுக்கு நாடகப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.மாநில அளவிலான நாடகப்போட்டி, கடந்த 8ம் தேதி திருநெல்வேலியில் நடந்தது. மாவட்ட அளவில் நடந்த அறிவியல் நாடகப் போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் கோவையில் இருந்து பங்கேற்ற, காந்தி மாநகர் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் தேவதர்ஷினி, தேவதா, கிரேஸ் பிரின்சி, ராஜதுரை, பத்ரிஷ், கிருஷ்ணல், குணவதி, வர்சினி, அக் ஷயா, தேவவர்ஷினி மற்றும் தேவதர்ஷினி ஆகியோர், நீர் மேலாண்மை குறித்த அறிவியல் நாடகத்தில் பங்கேற்று, மாநில அளவில் முதல் பரிசை பெற்றுள்ளனர்.இதன் வாயிலாக இந்த மாணவர்கள், தென் மாநில அளவில் நடக்கும் அறிவியல் நாடகப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், நாடகத்தை ஒருங்கிணைத்த தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் பொறுப்பாசிரியர்கள் கவிதா, சுமதி ஆகியோரையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை