உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிவசேனா அமைப்பு சார்பில் விநாயகர் சிலை விசர்ஜனம்

சிவசேனா அமைப்பு சார்பில் விநாயகர் சிலை விசர்ஜனம்

போத்தனுார்; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவசேனா அமைப்பு சார்பில், குறிச்சி பஸ் ஸ்டாப் அருகே 8 அடி உயர சித்தி விநாயகர் சிலையை, கயிலை மாமணி ராஜாமணி பிரதிஷ்டை செய்தார். தொடர்ந்து பிரசாதம் வழங்குதல், மதியம் அன்னதானம் நடந்தன. திரளானோர் தரிசித்துச் சென்றனர். குறிச்சி முக்கிய வீதிகளில், நேற்று மாலை விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின், குறிச்சி குளக்கரையில் பூஜைக்கு பின், அமைப்பின் மாவட்ட தலைவர் கிட்டாமணி தலைமையில் விசர்ஜனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !