உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகர் ஊர்வலம்; 31ல் போக்குவரத்து மாற்றம்

விநாயகர் ஊர்வலம்; 31ல் போக்குவரத்து மாற்றம்

கோவை; கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 243 விநாயகர் சிலைகள் நாளை மறுதினம் (31ம் தேதி) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுண்டப்பாளையம் ரோடு, முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்படுகிறது. இதையடுத்து, கோவை நகர் பகுதியில், 31ம் தேதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் காலை 8 முதல் இரவு 10 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து பேரூர் மார்க்கமாகச் செல்லும் அனைத்து வாகனங்களும், பேரூர் பைபாஸ், -செல்வபுரம் சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக பேரூர் செல்ல வேண்டும். காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி, சலிவன் வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும், உக்கடம் சென்று வலது புறம் திரும்பி, பேரூர் பைபாஸ், சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்வபுரம் சென்று, வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். உக்கடம் வழியாக திருச்சி ரோடு மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும், சுங்கம் பைபாஸ் வழியாக திருச்சி சாலைக்கு செல்ல வேண்டும். உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும், ஒப்பணக்கார வீதி, ஐந்து முக்கு, பெரிய கடை வீதி, லங்கா கார்னர் ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் செல்ல வேண்டும். மேட்டுப்பாளையம் ரோடு தடாகம் ரோட்டில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், ஜி.சி.டி., சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, பாரதி பார்க், அவினாசிலிங்கம் பல்கலை வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சங்கனூர் பாலம் சந்திப்பில் இடது புறம் திரும்பி, கணபதி - காந்திபுரம் வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம். மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள், வடகோவை மேம்பாலம் வழியாக காந்திபுரம் செல்ல வேண்டும். பேரூர் பேரூரில் இருந்து நகருக்குள் வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள், பேரூர் ரோடு, செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி அருகில் வலது பக்கம் திரும்பி, பேரூர் புறவழிச்சாலை வழியாக உக்கடம் அடைந்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும். பேரூர் சாலையில் இருந்து தடாகம் ரோட்டுக்குச் செல்லும் வாகனங்கள் சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு, பனமரத்துார், பூசாரிபாளையம், சீரநாய்க்கன் பாளையம் சுகர்கேன் சாலை வழியாக மருதமலை சாலையை அடைந்து, லாலி ரோட்டில் இடது புறமாக திரும்பி, தடாகம் சாலையில் செல்லலாம். மருதமலையில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், லாலி ரோட்டில் இடது புறம் திரும்பி தடாகம் ரோடு, ஜி.சி.டி., பாரதி பார்க் ரோடு, அவினாசிலிங்கம் பல்கலை சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், கூட்ஸ் ஷெட் ரோடு மற்றும் மரக்கடை சந்திப்பில் இடது புறம் திரும்பி, என்.எச்., ரோடு, ஐந்து முக்கு, டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்ல வேண்டும். மருதமலை செல்ல... காந்திபுரத்தில் இருந்து மருதமலை மார்க்கம் செல்லும் பஸ்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் சிவானந்தா காலனி, ஏ.ஆர்.சி., சந்திப்பு, அழகேசன் ரோடு சந்திப்பை அடைந்து, தடாகம் ரோடு, ஜி.சி.டி., லாலி ரோடு ரவுண்டானா சென்று மருதமலை செல்ல வேண்டும். வாகனம் நிறுத்த தடை விநாயகர் சிலை ஊர்வல பாதையான ராஜ வீதி, ரங்கே கவுடர் வீதி, பெரிய கடை வீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி, சலீவன் வீதி, காந்திபார்க், தெலுங்கு வீதி. சுக்ரவாரப்பேட்டை, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தெப்பக்குளம் மைதானம், பூ மார்க்கெட் ரோடு, பால் மார்க்கெட் ரோடு, மெக்ரிக்கர் ரோடு, டி.பி.ரோடு, லைட் ஹவுஸ் மைதானம், சுப்பிரமணியம் ரோடு, வெங்கட கிருஷ்ணா ரோடு, தடாகம் ரோடு, பூசாரிபாளையம் ரோடு ஆகிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை