உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில் வளாகத்தில் குப்பை; சுகாதாரம் பாதிப்பால் அதிருப்தி

கோவில் வளாகத்தில் குப்பை; சுகாதாரம் பாதிப்பால் அதிருப்தி

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, பிளேக் மாரியம்மன் கோவில் வளாகத்தில் குப்பை கொட்டப்படுவதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப் அருகே உள்ளது பிளேக் மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலின் சுற்று பகுதியில், ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளது. மேலும், நான்கு சக்கர வாகனங்கள் இங்கு நிறுத்தப்படுகிறது.கோவில் வளாகத்தின் முன் பகுதியின் ஓரத்தில், ஏராளமாக குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கடை வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், மாலை நேரத்தில், குப்பை கொட்டிய இடத்தில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பக்தர்கள் கூறியதாவது:பக்தர்கள் தினமும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கோவில் அருகில் கடை வைத்திருப்பவர்கள் சிலர் இங்கு குப்பை கொட்டி செல்கின்றனர். கோவில் வளாகத்தின் உள்ளே குப்பை கொட்ட கூடாது என தெரிந்திருந்தும், குப்பை கொட்டி செல்கின்றனர்.மேலும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இங்குள்ள குப்பையை அகற்றி, அந்த இடத்தை சுத்தம் செய்யவும், குப்பைத்தொட்டி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் வளாகத்தின் வெளிப்புறத்தில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை