உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையோரத்தில் எரிக்கப்படும் குப்பை

சாலையோரத்தில் எரிக்கப்படும் குப்பை

கோவில்பாளையம்: வெள்ளானைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே, கள்ளிப்பாளையம் சாலையை ஒட்டி குப்பை கொட்டப்படுகிறது. ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கு, அதிகளவு குப்பை கொட்டுகின்றனர். அதிகமாக சேர்ந்த பின் குப்பைக்கு தீ வைக்கப்படுகிறது. இதனால் பள்ளியில் மாணவ, மாணவியர் மூச்சுத் திணறல் மற்றும் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். கற்றலில் கவனம் செலுத்த முடிவதில்லை. சாலையில் வாகனங்களில் செல்வோரும் அவதிப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தால், குப்பையை வேறு இடத்திற்கு எடுத்து செல்கின்றனர். சில நாட்களில் மீண்டும் பள்ளி அருகிலேயே குப்பை கொட்டி தீ வைக்கப்படுகிறது. ‘இதற்கு ஊராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்’ என, பொதுமக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை