உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை தேங்கக்கூடாது; மேயர் கறார்!

குப்பை தேங்கக்கூடாது; மேயர் கறார்!

கோவை; மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களுடன் ஆலோசனை கூட்டம், டவுன்ஹால் பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி தலைமையில் நேற்று நடத்தப்பட்டது. உதவி நகர் நல அலுவலர் பூபதி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், 'குப்பை தேக்கம் தொடர்பாக, சுகாதார அலுவலர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு, குப்பை அள்ளும் வாகனங்கள் பழுதாகி, பணிமனையில் நிற்பதாக தெரிவிக்கப்பட்டது. அவற்றின் பழுதை விரைந்து நீக்கி, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கொசு ஒழிப்பு பணியாளர்கள் தினமும் வீடு வீடாகச் சென்று, தொட்டிகளில் தண்ணீர் சேமித்து வைத்திருந்தால், 'அபேட்' மருந்து தெளிக்க வேண்டும்' என மேயர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ