புதிய அம்சங்களுடன் வந்தாச்சு ஜெமினி சர்க்கஸ்!
குழந்தைகளை குதுாகலப்படுத்த, கோவைக்கு வந்தாச்சு ஜெமினி சர்க்கஸ். கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறை என, அடுத்தடுத்து விடுமுறை வருவதால், குழந்தைகளுக்கு சர்க்கஸ் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.கோவை சிங்காநல்லுார் வெங்கடலட்சுமி கல்யாண மண்டபம் அருகில் உள்ள மைதானத்தில், ஜெமினி கிராண்ட் சர்க்கஸ் நடக்கிறது. இதில், லிம்போ டான்ஸ், பயர் ஈட்டிங்பாரம்பரிய ஆப்பிரிக்க இசையுடன் எரியும் நெருப்பின் கீழ், நிகழ்த்தப்படும் நடனங்கள், பிரமிக்க வைக்கின்றன.அந்தரத்தில் தொங்கும் பார் கம்பிகளை பிடித்துக் கொண்டு, கலைஞர்கள் பல்டி அடிக்கும் காட்சிகள் அசத்தலாக ரசிக்கும்படி உள்ளன.ரஷியன் ஸ்டிக் பேலன்ஸ், ஸ்பிரிங் நெட், ஸ்விங்கிங் அக்ரோபேட், ரஷியன் ரோப் பேலன்ஸ் மற்றும் காமிக் சேர் அக்ரோபேட் ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன.அமெரிக்கன் ரிங் ஆப் டெத், சுமன் சைக்கிள் அக்ரோபாட்டிக்ஸ் ஆக்ட், குளோப் மோட்டார் சைக்கிள் போன்றவை, பார்வையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும்.ஜெமினி சர்க்கஸ் மேலாளர் சேதுமாதவன் கூறும் போது, ''இந்த சர்க்கஸில், 40 ஆண் கலைஞர்கள், 60 பெண் கலைஞர்கள் சாகச காட்சிகளை நிகழ்த்துகின்றனர். பல புதிய சாகசக்காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன,'' என்றார்.