உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடும்பத்தோடு ரசிக்க ஜெமினி சர்க்கஸ்

குடும்பத்தோடு ரசிக்க ஜெமினி சர்க்கஸ்

கோவை : கோவை வ.உ.சி., மைதானத்தில், ஜெமினி கிராண்ட் சர்க்கஸ் நிறுவனத்தின் சர்க்கஸ் நிகழ்ச்சி துவங்கியுள்ளது; ஆக., 4 வரை நடைபெறுகிறது. தினமும் மதியம், 1:00 மணி, மாலை, 4:00 மணி, இரவு, 7:00 மணி என, மூன்று காட்சிகள் நடைபெறுகின்றன. டிக்கெட் கட்டணம் ரூ.150, ரூ.250. ரூ.350. ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சாகசங்களை சர்க்கஸ் கலைஞர்கள் செய்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.ஜெமினி கிராண்ட் சர்க்கஸ் உரிமையாளர் அஜய் சங்கர் கூறியதாவது: 1951 முதல் நடைபெற்று வரும் ஜெமினி சர்க்கஸ், 75 ஆண்டை நெருங்குகிறது. வ.உ.சி., மைதானத்தில் நடந்து வரும் ஜெமினி சர்க்கசில், 50 ஆண்கள், 50 பெண்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று, தங்களது திறமையை காட்டி வருகின்றனர். நன்கு பயிற்சி பெற்ற ஆப்பிரிக்க மற்றும் ரஷ்ய கலைஞர்கள் சாகசங்களை நிகழ்த்துகின்றனர். குழந்தைகளோடு வந்து குடும்பமாக கண்டு ரசிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ