சின்னவேடம்பட்டியில் விபத்து; பைக் மோதி சிறுமி பலி
கோவை; பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பினோத் சோத்ரி; மனைவி சவிதா தேவி, 29. இத்தம்பதி மகள் அனுஷ்கா குமாரி, 11. பினோத் சோத்ரி குடும்பத்துடன் சரவணம்பட்டியில் தங்கி, தொழிலாளியாக பணிபுரிகிறார். அனுஷ்கா குமாரி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.இரு தினங்களுக்கு முன், அனுஷ்கா குமாரி உறவினருடன் சின்னவேடம்பட்டியில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த பைக் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின், இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய, ராமநாதபுரம் குளத்துவாய்க்கால் ரோட்டை சேர்ந்த சலாஹுதீன் அயூப், 22 என்பவரை போலீசார் கைது செய்தனர்.