உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டுப்பன்றி தாக்கி சிறுமி காயம் 

காட்டுப்பன்றி தாக்கி சிறுமி காயம் 

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் சிறுமி காயமடைந்தார். வேலுாரை சேர்ந்த அண்ணாமலை, பூவலப்பருத்தியில் குடும்பத்துடன் தங்கி பல ஆண்டுகளாக செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வருகிறார். இவரது, 16வயது மகள், ரெட்டியாரூர் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். இந்நிலையில், வீட்டின் முன்பாக நின்றிருந்த சிறுமியை, காட்டுப்பன்றி தாக்கியது. இதை கண்ட, சிறுமியின் தந்தை சப்தம் போடதும் காட்டுப்பன்றி ஓடியது. காயமடைந்த சிறுமியை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது குறித்து வனத்துறை மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை