அறிகுறிகள் தெரிந்தவுடன் வர ஜி.கே.என்.எம்., அழைப்பு
கோவை: ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனையில், புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டாக்டர்கள், மாணவர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் ஆகியோர் வண்ண ரிப்பன்களை அணிந்து, புற்றுநோயாளிகளுக்கு ஆதரவை தெரிவித்தனர். புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், டாக்டர்கள், பொதுமக்கள், நோயாளிகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டால் மட்டுமே புற்றுநோயின் பாதிப்பை தவிர்க்க முடியும் என்ற, இவ்வாண்டு சர்வதேச புற்றுநோய் விழிப்புணர்வு கருப்பொருளை வலியுறுத்தினர்.மருத்துவமனையின் புற்றுநோய்த்துறை தலைவர் டாக்டர் சிவனேசன் பேசுகையில், '' அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது அவசியம். ஆரம்பநிலை சிகிச்சையின் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும்,'' என்றார். நிகழ்வில், டாக்டர் ராஜ்குமார், டாக்டர்கள், சுகாதார ஊழியர்கள் கலந்துகொண்டவர்.