உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் கண்ணாடி சிதறல்: விபத்து அபாயம்

ரோட்டில் கண்ணாடி சிதறல்: விபத்து அபாயம்

கிணத்துக்கடவு; பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், தாமரைக்குளம் அருகே ரோட்டில் சிதறி உள்ள கண்ணாடி துகளால் விபத்து அபாயம் உள்ளது.பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலை ரோட்டில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதில், கடந்த, 6ம் தேதி, இரவில் பஞ்சராகி நின்றிருந்த டெம்போ மீது அரசு பஸ் மோதி விபத்து நடந்தது. இதில் பஸ் கண்ணாடி சிதறி ரோட்டில் விழுந்தது.இந்த கண்ணாடி சிதறல்களை முழுமையாக அகற்றப்படாமல், ரோட்டின் ஓரத்தில் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் இப்பகுதியை கடக்கும்போது தடுமாறும் நிலை உள்ளது. மேலும், சில பைக்குகளில் 'பஞ்சர்' ஏற்பட்டது.தாமரைக்குளத்தில் இருந்து கிணத்துக்கடவுக்கு, பெரும்பாலான பைக் ஓட்டுநர்கள், விபத்து நடந்த பகுதி வழியாக 'ஒன்வே'யில் ஆபத்தை உணராமல் பயணிக்கின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி, ரோட்டில் சிதறிய கண்ணாடி துகளை அகற்ற வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை