உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் கடையில் கோதுமை வாங்கச் சென்றால் ஏமாற்றம்

ரேஷன் கடையில் கோதுமை வாங்கச் சென்றால் ஏமாற்றம்

கோவை; கோவையில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு கார்டுக்கு, ஒரு கிலோ கூட கோதுமை கிடைப்பதில்லை என, ரேஷன் கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு, அரிசியுடன் ஐந்து கிலோ கோதுமையும் வழங்கப்பட்டு வந்தது. தமிழகத்துக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த கோதுமை அளவை குறைத்து விட்டதாக கூறி, கார்ட தாரர்களுக்கு வழங்கப்படும் அளவு குறைக்கப்பட்டு, ஒரு கார்டுக்கு ஒரு கிலோ மட்டுமே வழக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ கோதுமையும் வழங்கப்படவில்லை. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு கோதுமை ஒதுக்கீட்டை, 17 ஆயிரம் டன்னாக உயர்த்தியுள்ளது. இருந்தும் கார்டுதரரர்களுக்கு கூடுதல் கோதுமை கிடைக்கவில்லை. ரேஷன்கடை ஊழியர்கள் கூறுகையில், 'ஆயிரம் கார்டுகள் உள்ள கடைக்கு, 500 கிலோ கோதுமை மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது. முந்தி வரும் கார்டுதாரர்களுக்கு, ஒரு கிலோ வழங்கப்படுகிறது. மீதம் உள்ள கார்டுதாரர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த மாதமும் கோதுமை அதே அளவுதான் வந்துள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி