உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கழிவறைக்கு செருப்பின்றி செல்வதால் நோய் அபாயம்

கழிவறைக்கு செருப்பின்றி செல்வதால் நோய் அபாயம்

கோவை; கோவையில், அரசு ஆரம்பப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கழிப்பறைகளை பயன்படுத்தும்போது, கட்டாயம் காலணி அணிய வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும், பெரும்பாலான மாணவர்கள் சாதாரண காலணிகளையே பயன்படுத்துகின்றனர். இந்த காலணிகளையும், பல பள்ளிகளில் மாணவர்கள் வெளியே கழற்றிவிட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இடைவேளை நேரங்களில், காலணி அணியாமலே, கழிப்பறைகளுக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், தொற்று நோய்கள் பரவும் அபாயமும் அதிகரிக்கிறது. 'காலணிகள் அணியாமல் கழிப்பறைகளைப் பயன்படுத்துவது, கிருமிகள் பரவ முக்கிய காரணமாக அமைகிறது. இதனால் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படக்கூடும்' என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, கழிப்பறைகளைப் பயன்படுத்தும்போது, கட்டாயம் காலணிகள் அணிய வேண்டும் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி