உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புனித வெள்ளி; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புனித வெள்ளி; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தேவாலயங்களில், புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடந்தது.புனித வெள்ளியையொட்டி, பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் உள்ள புனித லுார்து அன்னை தேவாலயத்தில், ஆலய பங்கு தந்தை ஜேக்கப் அடிகளார் தலைமையில், சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு பிரார்த்தனை, ஆராதனை வழிபாடு நடைபெற்றது.ஏராளமான ஆண்கள், பெண்கள், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், ஆராதனை வழிபாட்டில் பங்கேற்றனர்.இயேசு கிறிஸ்து நாதர், புனித வெள்ளியன்று இறந்த நாளாக கருதி துக்கம் அனுசரிக்கப்பட்டு, அன்றைய நாள் முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகள் ஆலயத்தில் நடைபெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் புனி கஞ்சி வழங்கப்பட்டது.இன்று இரவு இயேசு கிறிஸ்து நாதர் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல் பெருவிழாவை கொண்டாடும் வகையில், இன்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி, கூட்டுப்பிரார்த்தனை, ஆராதனை வழிபாடுகள் நடக்கின்றன.ஈஸ்டர் திருப்பலியின் போது, புதிய பாஸ்காதிரி, புது நெருப்பு, புது தீர்த்தம் மந்திரிக்கப்படும். இன்றுடன் கிறிஸ்துவர்கள், 40 நாட்கள் கடைபிடித்து வந்த உபவாசம் விரதத்தை முடித்துக்கொள்கின்றனர். நாளை ஈஸ்டர் தினம் கொண்டாடப்படுகிறது.இதுபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள தேவாலயங்களில், புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

வால்பாறை

வால்பாறை சென் லுக் தேவாலயத்தின் சார்பில், கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நாளை நினைவு கூறும் வகையில் சிலுவை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். வால்பாறை புனித லுாக்கா தேவாலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், வால்பாறை நகர், ஸ்டேன்மோர் ரோடு வழியாக, மாணிக்கா மாதா கோவில் சந்திப்பு வரை சென்றது. அதன் பின் ஆலய பங்கு தந்தை ஜிஜோ தலைமையில் திருப்பலி, சிறப்பு ஜெபவழிபாடும் நடைபெற்றது. விழாவில் நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, ஆரோக்கிய மாதாவை வழிபட்டனர்.வால்பாறை திருஇருதயதேவாலயம், சி.எஸ்.ஐ., சர்ச்., ரொட்டிக்கடை புனித வனத்துசின்னப்பர் ஆலயம், கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும், ஜெபவழிபாடும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை