சப்ளை செயின் மேனேஜ்மென்ட் துறைக்கு நல்ல வாய்ப்புகள்
சப்ளைசெயின் மேனேஜ்மென்ட் துறை வல்லுநர் செந்தில்ராஜா பேசியதாவது:சப்ளை செயின் மேனேஜ்மென்ட் என்பது ஒரு பொருள் உற்பத்தியாகும் இடம் ஒன்று, நுகர்வோர் உள்ள இடம் வேறு. பொருள் உற்பத்தி மற்றும் வந்து சேர்வதற்கும் இடையில் உள்ள செயல்பாடுகளே சப்ளைசெயின் மேனேஜ்மென்ட். கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., புட் டெக்னாலஜி என அனைத்து துறை படித்தவர்களும் இதில் பணிபுரிவார்கள்.சப்ளை செயின் மேனேஜ்மென்டின் ஓர் அங்கம் தான் லாஜிஸ்டிக்ஸ். தொழில்துறைகள், தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, லாஜிஸ்டிக்ஸ் துறையின் வளர்ச்சியும் மேம்பட்டுள்ளது. அதேபோன்று, எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ந்த தொழில்களில் பல்வேறு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.2023ல் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டாளர்கள் 1.6 மில்லியன் ஆக இருந்தனர்; 2024ல் 2 மில்லியனாக உயர்ந்துள்ளனர். தொடர்ந்து, இதன் தேவை அதிகரிக்கும். இத்துறையில், வாகன வடிவமைப்பு மற்றும் மேம்பாடு, சைபர் செக்யூரிட்டி வேக்கிள் நெட்வொர்க்கிங், பேட்டரி டெக்னாலஜி என பல்வேறு துறைகள் உள்ளன. ஆர்வமுள்ள மாணவர்கள், இத்துறையை தயக்கமின்றி தேர்வு செய்து படிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.