உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசாணிக்காய் அறுவடை துவக்கம் ஓணம் பண்டிகையால் விலை உயர்வு

அரசாணிக்காய் அறுவடை துவக்கம் ஓணம் பண்டிகையால் விலை உயர்வு

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், அறுவடை செய்யப்படும், 65 சதவீதம் அரசாணிக்காய்கள், கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், விவசாயிகள் பலர், மானாவாரி பயிர் மற்றும் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், வடக்கிபாளையம், நெகமம், கோமங்கலம், கோட்டூர், சமத்துார் உள்ளிட்ட பல பகுதிகளில், பூசணி மற்றும் அரசாணிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு, தென்மேற்கு பருவமழையை நம்பி, சாகுபடி செய்யப்பட்ட பூசணி மற்றும் அரசாணிக்காய்கள், அறுவடை செய்யப்பட்டு, விற்பனைக்காக மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது, விளைச்சல் அதிகரித்த நிலையில், அறுவடையும் துவங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓணம் பண்டிகை நெருங்குவதால், அறுவடை செய்யப்படும் 65 சதவீதம் அரசாணிக்காய்கள், கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர், நேரடியாகவே தோட்டத்துக்கு வந்து, மொத்த விலை கொடுத்து, பூசணி மற்றும் அரசாணிக்காய் கொள்முதல் செய்கின்றனர். வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த மாதம், மார்க்கெட்டுக்கு, அரசாணிக்காய் வரத்து குறைந்த நிலையில், கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, ஓணம் பண்டிகை காரணமாக, கேரளாவுக்கு கூடுதல் விலைக்கு பூசணி மற்றும் அரசாணிக்காய் அனுப்பப்படுகிறது. தற்போது, கிலோ, 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ