உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மீண்டும் கிடைத்தது: வீட்டு மின் இணைப்பு! 

மீண்டும் கிடைத்தது: வீட்டு மின் இணைப்பு! 

கோவை : 'மின் பணியாளர்கள் தருகின்றனர் 'ஷாக்' என்ற தலைப்பில், மின் வகையை ( டேரிப் சேஞ்ச்) மின்வாரியத்தினர் திடீரென தன்னிச்சையாக மாற்றுவது குறித்த, விரிவான செய்தி நம் நாளிதழில் நேற்று வெளியானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு, மீண்டும் வீட்டுமின் இணைப்புகள் நேற்று வழங்கப்பட்டன.ஒருங்கிணைந்த குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட வீட்டு மின் இணைப்புகளை, மின்வாரியம் ஒழுங்குபடுத்தி வருகிறது. அதற்காக மின்வாரியப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த வீடுகள் மற்றும் குடியிருப்புகளில், கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.கள ஆய்வில், மின்வாரியம் வகுத்துக்கொடுத்துள்ள மின்வாரிய விதிமுறைகளுக்கு புறம்பாக, வீட்டு மின் இணைப்புகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை வீட்டு மின் இணைப்பிலிருந்து, பொது மின் இணைப்பாக அதாவது, 1ஏ மற்றும்1 இ என்று மாற்றம் செய்தனர்.இதனால் பாதிக்கப்பட்ட மின் நுகர்வோரிடமிருந்து வந்த புகாரையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்தனர்.இதையடுத்து, பழைய நடைமுறையில் வீட்டு மின் இணைப்புகளாக மாற்றிக்கொடுத்தனர். இதனால் மின் நுகர்வோர் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை