மேலும் செய்திகள்
திருநங்கைகளுக்கு கல்வி சிறப்பு முகாம்
15-Jun-2025
கோவை; திருநங்கைகள் மற்றும் திருநம்பியர் உயர்கல்விக்கான, அனைத்து கல்வி செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்கிறது; படிப்பதற்கு தயாராக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட சமூகநலத்துறை அறிவித்துள்ளது.மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா கூறியதாவது:தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் சுயதொழில் துவங்க மானியத்தொகை, சுயஉதவிக்குழு பயிற்சி மற்றும் மானியம், இலவச தையல் இயந்திரங்கள், காப்பீட்டுத்திட்ட அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன், 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழை திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகை வழங்கப்படுகிறது.உயர்கல்வி தொடர விரும்பும் அனைத்து திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட, அனைத்து கல்விச் செலவினங்களையும் அரசே ஏற்றுக்கொள்கிறது.இதில் பயன்பெற, அனைத்து திருநங்கைகளும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, தமிழ்வழியில் கல்வி பயின்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. நலவாரியத்தால் வழங்கப்பட்ட, அடையாள அட்டையினை சான்றாக காண்பித்து, இத்திட்டத்தில் பயன்பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
15-Jun-2025