உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இஷ்டம் போல் இயங்கும் அரசு பஸ்: காத்திருந்து பொது மக்கள் அவஸ்தை

 இஷ்டம் போல் இயங்கும் அரசு பஸ்: காத்திருந்து பொது மக்கள் அவஸ்தை

அன்னூர்: அன்னூரில் இருந்து இரு வழித்தடங்களில், காரமடைக்கு இயங்கி வரும் 25 மற்றும் 25 ஏ டவுன் பஸ்கள் முறையாக இயங்குவதில்லை என, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கதவுகரை மக்கள் கூறுகையில், 'அன்னூரில் இருந்து கரியாம்பாளையம், கெம்ப நாயக்கன்பாளையம், கதவுகரை, பெரிய புத்தூர் வழியாக காரமடைக்கு 25ம் எண் அரசு டவுன் பஸ் இயங்கி வந்தது. சாலை மிகவும் மோசமாக இருந்ததால், ஆறு மாதங்களுக்கு முன் இயக்கம் நிறுத்தப்பட்டது. சாலை சரி செய்து பின்னரும், டவுன் பஸ் இயங்குவதில்லை. கடும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். மணிக்கணக்கில் காத்திருந்து, போக்கு வண்டிகளை பிடித்து செல்ல வேண்டி உள்ளது' என்றனர். நல்லி செட்டிபாளையம் மக்கள் கூறுகையில், 'அன்னூரில் இருந்து குருக்களையம் பாளையம், நல்லி செட்டிபாளையம், சாலையூர் வழியாக காரமடைக்கு இயங்கும், 25ஏ அரசு டவுன் பஸ் இரண்டு நாள் இயங்கினால், நான்கு நாள் இயங்குவதில்லை. எப்போது வரும் என்றே தெரிவதில்லை. மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. அரசு போக்குவரத்து கழக அன்னூர் கிளை அலுவலகத்தில் புகார் தெரிவித்தால், ஆட்கள் பற்றாக்குறை என்று பதில் கூறுகின்றனர். முறையாக அனைத்து டிரிப்புகளும் இயக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை