உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கல்லுாரி மாணவர்கள் கால்பந்து போட்டியில் வெற்றி

அரசு கல்லுாரி மாணவர்கள் கால்பந்து போட்டியில் வெற்றி

வால்பாறை; மாநில அளவில் நடந்த கால்பந்து போட்டியில், வால்பாறை அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் முதல் பரிசை பெற்றனர். 'கிணத்துக்கடவு புட்பால் அசோசியேசன்' சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 24 அணிகளை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில், வால்பாறை அரசு கல்லுாரி மாணவர்களும், கோவை ஜோசப் தனியார் கல்லுாரி மாணவர்களும் விளையாடினர். இதில் வால்பாறை கல்லுாரி மாணவர்கள் அபாரமாக ஆடி, முதல்பரிசு மற்றும் கோப்பையை தட்டி சென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, அரசு கல்லுாரி முதல்வர் ஜோதிமணி பாராட்டினார். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் பெரியசாமி, பிரியதர்ஷனி, அரவிந்தன், உடற்கல்வி பேராசிரியர் ராஜ்பால் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ