உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு துறைகள் ரூ.468 கோடி மின் கட்டண பாக்கி

அரசு துறைகள் ரூ.468 கோடி மின் கட்டண பாக்கி

மதுரை : மதுரையைச் சேர்ந்த மோகன் என்பவர் அரசு தலைமை செயலகம், சட்டசபை, எம்.எல்.ஏ., விடுதிகளின் மின் இணைப்புகளுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் பொது தகவல் அதிகாரியான மின்செயற்பொறியாளர் பிரேம்குமார், எம்.எல்.ஏ., விடுதிகளில் மொத்தம் 246 மின் இணைப்புகள் உள்ளன. இங்கு மின்கட்டண பாக்கி எதுவும் இல்லை.சென்னை அண்ணாசாலை கோட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி கட்டடங்கள் மின் இணைப்புக்குண்டான நிலுவைத்தொகை 677.96 கோடி ரூபாய் உள்ளது. தமிழக அரசு துறைசார்ந்த மின் இணைப்புக்குண்டான நிலுவைத்தொகை 468.58 கோடி ரூபாய் உள்ளது' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ