உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து அரசு ஊழியர் தற்கொலை

ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து அரசு ஊழியர் தற்கொலை

கோவை; கோவை கலெக்டர் அலுவலக உதவியாளர் ஒருவர் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் தங்கியிருக்கும் ஹவுசிங் யூனிட் உள்ளது. இங்கு 14 மாடிகள் கொண்டு 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதன் டி பிளாக் ஐந்தாவது மாடியில், கோவை கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த கருப்புசாமி, 37 என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை