உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலி பணிடங்களை நிரப்புங்கள் அரசு ஊழியர் பேரவை தீர்மானம்

காலி பணிடங்களை நிரப்புங்கள் அரசு ஊழியர் பேரவை தீர்மானம்

கோவை:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 17வது மாவட்ட பேரவை கூட்டம், கோவை தாமஸ் கிளப் அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், 'தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆறு லட்சத்துக்கு மேலான காலி பணியிடங்களை முறையான காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். அரசு துறைகளில் ஒப்பந்தம், 'அவுட் சோர்சிங்' முறையில் பணி நியமனம் செய்வதையும், தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணையை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நில அளவை துறைகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் அருணகிரி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில துணை தலைவர் மாலதி ராணி, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொது செயலாளர் பிரகலதா உள்ளிட்டோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ