உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழ்வூதியம் வழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

வாழ்வூதியம் வழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

கோவை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், வாழ்வூதியம் வழங்க கோரி, கோவை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட தலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட ஓய்வு பெற்று அரசு ஊழியர் சங்க தலைவர் பலராமன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது: அனைத்து அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கை, புதிய ஓய்வூதியத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதுதான். கடந்த தேர்தலில் முதல்வர் கொடுத்த வாக்குறுதியை, நிறைவேற்ற வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் என, அனைத்துத் துறைகளிலும், பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு, தமிழக அரசு வாழ்வூதியம் வழங்க வேண்டும். மிகவும் குறைந்த ஊதியத்தில், பல ஆண்டுகளாக பணியாற்றி வரும், இவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று, வாழ்வூதியம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.அரசு ஊழியர் மாவட்ட செயலாளர் உதயகுமார், மாவட்ட துணைத்தலைவர்கள் பிலால் மக்துாம், இளங்கோவன் சிவானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ