உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுாற்றாண்டு விழா காணும் அரசு மேல்நிலைப்பள்ளி

நுாற்றாண்டு விழா காணும் அரசு மேல்நிலைப்பள்ளி

சூலுார்; சூலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நூற்றாண்டு விழா நடக்கிறது.சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கடந்த, 1925ம் ஆண்டு ஏப்., 1ல் தாலுகா போர்டு துவக்கப்பள்ளியாக துவக்கப்பட்டது. 9.6.1926ல் ஜில்லா போர்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 14.6.1948ல், போர்டு உயர்நிலைப்பள்ளியாகவும், 28.7.1962ல்ஆண்கள் உயர்நிலைப் பள்ளியாகவும், 1.1.1966 ல்அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியாகவும் செயல்பட்டு வந்தது. சுற்றுவட்டாரத்நை சேர்ந்த ஏராளமான மாணவர்கள், இப்பள்ளியில் படித்து பல்வேறு, உயர் அரசு பொறுப்புகளை அடைந்தனர். பெரிய தொழிலதிபர்களாகவும் உயர்ந்தனர்.இந்நிலையில், 19.7.1978 ல் அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டும்,1991ல்ஜூலை மாதம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக பெயர் மாற்றம் பெற்று, நூற்றாண்டு விழாவை கண்டுள்ளது. முன்னாள் மாணவர்கள் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.முதற்கட்டமாக முன்னாள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் தலைமையாசிரியர்களை பள்ளிக்கு அழைத்து பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினர்.இன்று நடக்கும் விழாவில்,முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !